கைத்தறி விழிப்புணர்வு முகாம்

கடலூரில் கைத்தறி விழிப்புணர்வு முகாம் நடந்தது.

Update: 2023-08-18 18:45 GMT

கடலூர்:

கைத்தறி ரகங்கள் பற்றிய விழிப்புணர்வை இளைய தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் மாநிலம் முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் கைத்தறி விழிப்புணர்வு முகாம்களை நடத்த வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்தது. அதன்படி கடலூர் கே.என்.சி. கல்லூரியில் கைத்தறி துறை மற்றும் கோ-ஆப்டெக்ஸ் சார்பில் கைத்தறி விழிப்புணர்வு முகாம் நேற்று நடந்தது.

முகாமுக்கு கோ-ஆப்டெக்ஸ் முதுநிலை மண்டல மேலாளர் சாந்தாராம் தலைமை தாங்கினார். கல்லூரி முதல்வர் ஷபீனா பானு வரவேற்றார். முகாமில் சிறப்பு அழைப்பாளராக கடலூர் கைத்தறி துறை உதவி இயக்குனர் மணிமுத்து, கோ-ஆப்டெக்ஸ் ஓய்வு பெற்ற முதுநிலை மண்டல மேலாளர் ரமணி ஆகியோர் கலந்து கொண்டு, கைத்தறி துணிகள் பற்றி விளக்கி கூறினர்.

முகாமில் தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் பல்வேறு வகையான பட்டுச்சேலைகள், பருத்திச்சேலைகள், புவிசார் குறியீடு பெற்ற கைத்தறி ரகங்கள், ஹோம் டெக்ஸ்டைல்ஸ் ரகங்கள், நாகரீக பைகள், துப்பட்டாக்கள், போர்வைகள், தலையணை உறைகள் மற்றும் துண்டுகள் போன்ற பல்வேறு வகையான துணி வகைகள் காட்சிக்காக வைக்கப்பட்டு இருந்தது. முகாமில் கைத்தறி துறை அதிகாரிகள், கோ-ஆப்டெக்ஸ் ஊழியர்கள், 300-க்கும் மேற்பட்ட மாணவிகள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்