ஓட்டலில் தவற விட்ட 5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

ஓட்டலில் தவற விட்ட 5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

Update: 2022-07-07 18:37 GMT

நாகர்கோவில், 

ஓட்டலில் தவற விட்ட 5 பவுன் நகை உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

 நகை உரியவரிடம்...

நாகர்கோவில் ஜவகர் தெருவில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 28-ந் தேதி வழக்கம் போல வியாபாரம் நடந்தது. இதை தொடர்ந்து இரவில் ஓட்டலை சுத்தம் செய்யும் பணி நடந்தது. அப்போது ஓட்டலில் 5 பவுன் நகை கீழே கிடந்தது. ஓட்டலில் சாப்பிட வந்த நபர் யாரோ தனது நகையை தவற விட்டு சென்றது தெரியவந்தது. இதை பார்த்த ஓட்டல் பெண் ஊழியர் உடனே நகையை எடுத்து ஓட்டல் உரிமையாளர் சேகர் என்பவரிடம் கொடுத்தார்.

பின்னர் அந்த நகையை நேசமணிநகர் போலீசில் சேகர் ஒப்படைத்தார். இதைத் தொடா்ந்து நகையை தவறவிட்டது யார்? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். அப்போது மேல ராமன்புதூரை சேர்ந்த கோபிநாதன் (வயது 75) என்பவர், தான் குடும்பத்தோடு சாப்பிட வந்தபோது நகையை தவறவிட்டதாக போலீசில் தொிவித்தார்.

பின்னர் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் முன்னிலையில் நகையை உரியவரான கோபிநாதனிடம், சேகர் மற்றும் போலீசார் சேர்ந்து ஒப்படைத்தனர். மேலும் நேர்மையாக நகையை எடுத்துக் கொடுத்த பெண் ஊழியர், ஓட்டல் உரிமையாளர் சேகர் ஆகியோரை போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்