கைவினை பொருட்கள் கண்காட்சி- கருத்தரங்கு
தெற்கு கள்ளிகுளம் தட்சணமாற நாடார் சங்க கல்லூரியில் கைவினை பொருட்கள் கண்காட்சி- கருத்தரங்கு நடந்தது.
வள்ளியூர் (தெற்கு):
தெற்கு கள்ளிகுளம் நெல்லை தட்சணமாற நாடார் சங்கம் கல்லூரியின் பொழுது போக்குக் குழு மற்றும் கல்வித் திறன் மேம்பாட்டுக் குழு இணைந்து பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் மாணவர் அரங்கில் வைத்து கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை மற்றும் கருத்தரங்கை நடத்தியது. பொழுது போக்குக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் மேரி பெர்னார்ட் வரவேற்று பேசினார். கண்காட்சியை கல்லூரி செயலர் வி.பி.ராமநாதன் தொடங்கி வைத்து பேசினார். முதல்வர் மேஜர் து.ராஜன் முன்னிலை வகித்தார். கல்லூரிக்குழு உறுப்பினர் பண்ணை கே.செல்வகுமார் வாழ்த்துரை வழங்கினார். ஓய்வு நேரத்தைப் பயனுள்ள வகையில் செலவிட கற்றுக் கொள்வது அவசியம் குறித்து கல்வித் திறன் மேம்பாட்டு குழுவின் ஒருங்கிணைப்பாளர் த.நிர்மலா உரையாற்றினார்.
இதில் ஏராளமான மாணவ-மாணவிகள் தாங்கள் தயாரித்த கைவினைப்பொருட்களையும், தாங்கள் சேகரித்த தபால் தலைகள் மற்றும் நாணயங்களையும் காட்சிக்கு வைத்திருந்தனர். சிறந்த கைவினைப் பொருட்களைச் செய்து வைத்திருந்த மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. முடிவில், வரலாற்றுத் துறை பேராசிரியர் ஷோபா நன்றி கூறினார்.