கைவினை பொருட்கள் கண்காட்சி

குன்னூரில் கைவினை பொருட்கள் கண்காட்சி நடந்தது.

Update: 2023-03-14 18:45 GMT

குன்னூர், 

குன்னூர் மவுண்ட் பிளசன்ட் பகுதியில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் திறன் மேம்பாட்டு பயிற்சி மையம் உள்ளது. இந்த மையம் சார்பில், உலக மகளிர் தினத்தை முன்னிட்டு, கைவினை பொருட்கள் கண்காட்சி நடைபெற்றது.

இதில் குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழுவினர்கள் கைவினை பொருட்களால் தயாரித்த உல்லன் ஆடைகள், எம்ராய்டரி கைப்பைகள், திருமண அலங்கார உடைகள், தோடர் பழங்குடியினரின் எம்ராய்டரி ஷால் மற்றும் கூடைப்பைகள் போன்றவை காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. இதேபோல் பல்வேறு வண்ணங்கள் மற்றும் சுவைகளில் கேக்குகள், ஹோம்மேட் சாக்லெட் இடம் பெற்றது. இந்த கண்காட்சியை ஏராளமானோர் பார்வையிட்டனர். மேலும் அவர்கள் தங்களுக்கு பிடித்த பொருட்களை ஆர்வத்துடன் வாங்கி சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்