மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்

ஆயக்குடி அருகே மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2023-05-24 19:00 GMT

தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில், ஆயக்குடி அருகே உள்ள அமரபூண்டியில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு வத்தக்கவுண்டன்வலசு கிளை தலைவர் பரமேஸ்வரன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பகத்சிங், ஒன்றிய தலைவர் மணிகண்டன், செயலாளர் கண்ணுச்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ஆர்ப்பாட்டத்தின்போது அமரபூண்டி-வத்தக்கவுண்டன்வலசு, வத்தக்கவுண்டன்வலசு-கரட்டுப்பிரிவு ஆகிய சாலைகளை சீரமைக்க வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்