மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
திருவெண்ணெய்நல்லூரில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவெண்ணெய்நல்லூர்,
திருவெண்ணெய்நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு மாற்றுத்திறனாளிகள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு திருவெண்ணெய்நல்லூர் ஒன்றிய அமைப்பு தலைவர் கெஜலட்சுமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய அமைப்பு செயலாளர் கோவிந்தராஜ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாற்றுத்திறனாளிகள் அனைவருக்கும் 100 நாட்கள் தொடர்ச்சியாக வேலை வழங்க வேண்டும், அரசு நிர்ணயிக்கும் கூலியை முழுமையாக வழங்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன கோஷங்களை எழுப்பினர்.