மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டம்
மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை குறைத்து, குறைவாக நிதி ஒதுக்கீடு செய்து பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அரசை கண்டித்து அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் நல சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறை தலைமை தபால் நிலையம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். மாவட்ட நிர்வாகிகள் கோவிந்தசாமி, பாரதிராஜா உள்ளிட்ட பலர் முன்னிலை வகித்தனர். இதில் மாவட்ட செயலாளர் புருஷோத்தமன், சி.ஐ.டி.யூ. மாவட்ட தலைவர் ரவீந்திரன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். ஆர்ப்பாட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான சலுகைகளை குறைத்து குறைவாக நிதி ஒதுக்கீடு செய்ததை கண்டிப்பது. மாற்றுத்திறனாளிகள் உரிமைகள் சட்டத்தை அமல்படுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். கிராம மாற்றுத்திறனாளிகளும் பயன் பெற்று வரும் 100 நாள் வேலைத்திட்டத்திற்கு அதிர்ச்சி அளிக்கும் வகையில் 30 சதவீத நிதியை குறைத்ததை கைவிட்டு வழக்கமாக ஒதுக்கீடு செய்யும் தொகையை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன. ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.