திண்டுக்கல்லில் ஹேண்ட்பால் சங்க பொதுக்குழு கூட்டம்
திண்டுக்கல்லில் ஹேண்ட்பால் சங்க பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது.
திண்டுக்கல்லில், மாவட்ட ஹேண்ட்பால் சங்கத்தின் பொதுக்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ரெத்தினம் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் ராஜசேகர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில், ஹேண்ட்பால் விளையாட்டை ஊக்குவிக்கும் வகையில் புதிதாக ஹேண்ட்பால் கிளப்புகள் தொடங்கப்பட்டு, கிளப் செயலாளர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.
எம்.எஸ்.பி. ஹேண்ட்பால் கிளப் செயலாளர் துரைராஜ், ஜி.டி.என். கிளப் செயலாளர் ராஜசேகர், பட்டேல் கிளப் செயலாளர் ஞானகுரு உள்பட பல்வேறு கிளப் செயலாளர்களான துரை, சிவக்குமார், கிஷோக், நெல்சன், சுரேஷ், ஜெயராம், கிறிஸ்டோபர், அர்ஜூனன், மனோஜ்குமார், கயல்விழி ஆகியோருக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இதனை மாவட்ட தலைவர் ரெத்தினம் வழங்கினார். மேலும், புதிதாக தொடங்கப்பட்ட ஹேண்ட்பால் கிளப்களுக்கு இடையே தொடர் போட்டிகள் நடத்தவும் முடிவு எடுக்கப்பட்டது.