மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி
கடையநல்லூர் அரசு பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு ஹால் டிக்கெட் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
கடையநல்லூர்:
கடையநல்லூர் ஒன்றியம் பொய்கை அரசு உயர்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதச்செல்லும் மாணவ-மாணவிகளுக்கு நுழைவு சீட்டு (ஹால் டிக்கெட்) வழங்கும் நிகழ்ச்சி பள்ளி மேலாண்மைக்குழுத் தலைவர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் முத்துராஜ் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் பொய்கை சோ.மாரியப்பன் கலந்து கொண்டு மாணவ-மாணவிகளுக்கு தேர்வு எழுத நுழைவு சீட்டு வழங்கினார். அப்போது, ஆண்டுதோறும் பள்ளியில் முதல் மூன்று இடங்களை பிடிக்கும் மாணவ-மாணவிகளுக்கு பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் மாரியப்பன் ஊக்கத்தொகை வழங்கப்படும், என தெரிவித்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் செய்யது அலி, காதர் பாத்திமாள், தனசிங், துரைச்செல்வி, பால்சுதா, ஆமீனாள் மற்றும் நாகஜோதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.