மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பினர் அரை நிர்வாண போராட்டம்

விருதுநகரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் போராட்டம் நடைபெற்றது.

Update: 2022-10-11 19:06 GMT

விருதுநகரில் மின்வாரிய ஓய்வு பெற்றோர் நல அமைப்பின் சார்பில் மாவட்ட தலைவர் சந்தியாகப்பன் தலைமையில் விருதுநகர் மின் பகிர்மான வட்ட தலைமை அலுவலகம் முன்பு அரை நிர்வாண போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது சங்க நிர்வாகிகள் கணேசன், பெருமாள் சாமி, சந்திரசேகரன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். கோட்ட செயலாளர் ராஜாராம் வாழ்த்தி பேசினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது கடந்த 12.4.2022-ந் தேதிய உத்தரவை முழுமையாக ரத்து செய்ய வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். நிலுவைத்தொகையை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து வலியுறுத்தப்பட்டது. முடிவில் இணைச்செயலாளர் பாக்யராஜ் நன்றி கூறினார்.


Tags:    

மேலும் செய்திகள்