3 ஆயிரத்து 987 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ஹஜ் மானிய தொகை: முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்

முதல் முறையாக ஹஜ் பயணம் மேற்கொண்ட 3 ஆயிரத்து 987 பேருக்கு தலா ரூ.25 ஆயிரம் ஹஜ் மானிய தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

Update: 2023-08-10 00:08 GMT

சென்னை,

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் சீரிய முயற்சியின் பலனாக, இந்த ஆண்டு ஹஜ் பயணத்துக்கு சென்னை புறப்பாட்டு தளமாக அறிவிக்கப்பட்டு, தமிழ்நாட்டு பயணிகள் சென்னையில் இருந்து ஹஜ் பயணம் மேற்கொண்டு, தங்கள் ஹஜ் கடமையை நிறைவேற்றி தாயகம் திரும்பியுள்ளனர். தமிழ்நாடு மாநில ஹஜ் குழு மூலம் முதன் முறையாக ஹஜ் பயணம் மேற்கொள்பவர்களுக்கு அரசு ஹஜ் மானியம் வழங்கி வருகிறது.

அதற்காக இந்த ஆண்டு தமிழ்நாடு அரசால் ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, தகுதியுள்ள பயணி ஒருவருக்கு ரூ.25 ஆயிரத்து 70 வீதம் 3 ஆயிரத்து 987 பயனாளிகளுக்கு இந்த மானிய தொகை வழங்கப்பட உள்ளது. இந்த திட்டத்தினை செயல்படுத்தும் விதமாக, 5 பயனாளிகளுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் தலா ரூ.25 ஆயிரத்து 70-க்கான காசோலைகளை ஹஜ் மானிய தொகையாக நேற்று வழங்கினார்.

கலந்து கொண்டோர்

இந்த நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தலைமைச் செயலாளர் சிவ் தாஸ் மீனா, தமிழ்நாடு மாநில ஹஜ் குழுவின் செயலாளர் மற்றும் செயல் அலுவலர் முகம்மது நசிமுத்தின்,

பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் ரீட்டா ஹரீஷ் தக்கர், சிறுபான்மை நல இயக்குனர் மு.ஆசியா மரியம் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்