எச்.வசந்தகுமார் நினைவு தினம்

பாளையங்கோட்டையில் எச்.வசந்தகுமார் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

Update: 2022-08-28 19:21 GMT

இட்டமொழி:

கன்னியாகுமரி முன்னாள் எம்.பி. எச்.வசந்தகுமார் 2-ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி நிகழ்ச்சிகள் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி ஆர்.மனோகரன் தலைமையில் நேற்று நடைபெற்றது.

பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் உள்ள கே.டி.சி.நகர் சமுதாய நலக்கூடத்தின் முன்பாகவும், மூலைக்கரைப்பட்டி பஸ் நிறுத்தம் அருகிலும், களக்காடு காமராஜர் உருவச்சிலைக்கு கீழேயும், தம்பித்தோப்பு பகுதியிலும் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எச்.வசந்தகுமார் உருவ படத்திற்கு ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்.

நிகழ்ச்சியில் தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, மாவட்ட துணைத்தலைவர்கள் சந்திரசேகர், செல்லப்பாண்டி, மாநில மகிளா காங்கிரஸ் நிர்வாகிகள், வட்டார காங்கிரஸ் தலைவர் வாகைதுரை, நகர தலைவர் ஜார்ஜ் வில்சன் உட்பட பலர் கலந்து கொண்டனர்..

Tags:    

மேலும் செய்திகள்