போலீசார் சார்பில் சிறுவர், சிறுமியர் உடற்பயிற்சி கூடம்

மாப்படுகையில் போலீசார் சார்பில் சிறுவர், சிறுமியர் உடற்பயிற்சி கூடம் போலீஸ் சூப்பிரண்டு நிஷா திறந்து வைத்தார்

Update: 2023-03-30 18:45 GMT

மயிலாடுதுறை அருகே மாப்படுகை ஊராட்சியில் மாவட்ட போலீசார் சார்பில் சிறுவர், சிறுமியருக்கான உடற்பயிற்சி கூடம் அமைக்கப்பட்டுள்ளது. அதற்கான திறப்பு விழா நேற்று நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு நிஷா கலந்து கொண்டு உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். முன்னதாக சிறுவர், சிறுமியருக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் வெற்றி பெற்ற 50-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியருக்கு பரிசு பொருட்கள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வழங்கினார். விழாவுக்கான ஏற்பாடுகளை அபயாம்பாள்புரம் குடியிருப்பு நல சங்க பொறுப்பாளர்கள் செய்திருந்தனர். இதில் போலீஸ் துணை சூப்பிரண்டுகள் ராஜ்குமார், ரவிச்சந்திரன், இன்ஸ்பெக்டர் செல்வம், ஊராட்சி மன்ற தலைவர் கனிமொழி, ஒன்றிய குழு உறுப்பினர் சிவக்குமார் மற்றும் போலீசார், ஊராட்சி பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்