உடற்பயிற்சி கூட உரிமையாளர் விஷம் குடித்து தற்கொலை

நாகர்கோவிலில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

Update: 2022-07-04 14:25 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவிலில் உடற்பயிற்சி கூட உரிமையாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

உடற்பயிற்சி கூட உரிமையாளர்

நாகர்கோவில் வடசேரி புதுக்குடியிருப்பு கவிமணி தெருவை சேர்ந்தவர் ஜெயக்குமார் (வயது 42). இவர் வடசேரி ஆராட்டுரோடு பகுதியில் உடற்பயிற்சி கூடம் நடத்தி வந்தார். நேற்று முன்தினம் உடற்பயிற்சி கூடத்தில் இருந்த போது திடீரென வாந்தி எடுத்து மயங்கி விழுந்தார். உடனே அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நள்ளிரவில் பாிதாபமாக இறந்தார். இதைத்தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பிணவறைக்கு கொண்டு செல்லப்பட்டது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

தற்கொலை

போலீசார் நடத்திய முதற்கட்ட விசாரணையில் ஜெயக்குமார் விஷம் குடித்து தற்கொலை செய்தது தெரியவந்தது. ஜெயக்குமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாகவும், அதை குடும்பத்தினர் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் ஏற்பட்ட மன வருத்தத்தில் அவர் விஷம் குடித்திருக்கலாம் என்று கூறப்படுகிறது. இ்ந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்