பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது.

Update: 2022-06-08 17:41 GMT

பர்கூர்:

பர்கூர் அரசு பொறியியல் கல்லூரியில் நவீன எந்திர வகை உடற்பயிற்சி கூடம் திறப்பு விழா நடந்தது. இந்த விழாவிற்கு கல்லூரியின் முதல்வர் விஜயன் தலைமை தாங்கினார். துணை முதல்வர் நபிசாபேகம் உடற்பயிற்சி கூடத்தை திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில், உடற்பயிற்சி அலுவலர் தங்கராஜீ, உடற்கல்வி இயக்குனர் (பொறுப்பு) செல்வநாயகம் மற்றும் துறை தலைவர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இது குறித்து கல்லூரி முதல்வர் கூறுகையில், உடற்பயிற்சி கூடத்தில் மாணவ, மாணவிகளுக்கு நவீன உடற்பயிற்சி கருவிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ரூ.12 லட்சம் மதிப்பில் ஏராளமான உடற்பயிற்சி கருவிகள் உள்ளன. இந்த கருவிகளால் மாணவ, மாணவிகள் தங்கள் உடல் நலனை நல்ல முறையில் பாதுகாத்து கொள்ளவும், உடலை வலிமையாக்கி கொள்ள வேண்டும் என்று கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்