பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
பெட்டிக்கடையில் குட்கா விற்றவர் கைது
குழித்துறை:
மார்த்தாண்டம் மெயின்ரோட்டில் கோட்டகம் பகுதியை சேர்ந்த ஜாண் (வயது40) என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார். இந்த கடையில் குட்கா பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து மார்த்தாண்டம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில் வேல்குமார் மற்றும் போலீசார் கடைக்கு சென்று சோதனையிட்டனர். அப்போது கடையில் 2 கிலோ 736 கிராம் எடையுள்ள குட்கா பொருட்கள் பாக்கெட்டுகளில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜாணை கைது செய்தனர்.