குட்கா விற்றவர் கைது
திண்டுக்கல் ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் பெட்டிக்கடையில் குட்கா விற்றவரை போலீசார் கைது செய்தனர்.
திண்டுக்கல் தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அழகு பாண்டி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் லாரன்ஸ் ஆகியோர் நேற்று முன்தினம் ஆர்.எம்.டி.சி. காலனி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது பெட்டிக்கடையில் குட்கா விற்றதாக அதே பகுதியை சேர்ந்த பாலசிங் (வயது 42) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.