காரில் தப்பிய குட்கா கடத்தல்காரர் கைது

மோட்டார்சைக்கிள் மீது மோதிவிட்டு காரில் தப்பிய குட்கா கடத்தல்காரர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-22 13:01 GMT

ஆம்பரை அடுத்த சாணாங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில் வேலூரை நோக்கி ஒரு கார் சென்று கொண்டிருந்தது. அந்த வழியாக முன்னால் சென்ற ஒரு மோட்டார்சைக்கிள் மீது கார் மோதி விட்டு நிற்காமல் சென்றது. அதில் மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேர் காயம் அடைந்தனர். விபத்தை பார்த்த பொதுமக்கள் காரை விரட்டி பிடிக்க முயன்றனர்.

இதுகுறித்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. ஆம்பூர் டவுன் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு காரை ஓரிடத்தில் மடக்கினர். காரை ஓட்டி வந்த டிரைவர் ஓசூர் பகுதியைச் சேர்ந்த சோனாராம் (வயது 25) என்றும், அவர் காரில் மூட்டை மூட்டையாக குட்கா பாக்கு பாக்கெட் பண்டல்கள் கடத்தி வந்ததும் தெரிய வந்தது. இதையடுத்து குட்கா பாக்கு பண்டல்களை காருடன் போலீசார் பறிமுதல் செய்தனர். குட்கா கடத்தலில் ஈடுபட்ட சோனாராமை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்