கிருஷ்ணகிரியில் ரூ.26 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல்
போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே போலீசார் நடத்திய அதிரடி சோதனையில், 4 டன் குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 26 லட்சம் ரூபாய் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த விசாரணையில் கர்நாடகாவில் இருந்து ராணிப்பேட்டை மாவட்டத்திற்கு குட்கா கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இந்த கடத்தல் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.