வேனில் கடத்த முயன்ற ரூ.2.89 லட்சம் குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து குருபரப்பள்ளி வழியாக வேலூருக்கு வேனில் கடத்த முயன்ற ரூ.2.89 லட்சம் குட்கா போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக டிரைவர் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-06-23 18:12 GMT

குருபரப்பள்ளி

வாகன சோதனை

கிருஷ்ணகிரி மாவட்டம் குருபரப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் ஓசூர்- கிருஷ்ணகிரி தேசிய நெடுஞ்சாலையில் புலியரசி மேடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி போலீசார் சோதனை செய்தனர்.

அதில் தடை செய்யப்பட்ட ஹான்ஸ் உள்ளிட்ட குட்கா பொருட்கள் 450 கிலோ இருந்தது தெரிய வந்தது. இவற்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 89 ஆயிரம். இதுதொடர்பாக வேன் டிரைவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

டிரைவர் கைது

அப்போது அவர் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் தாலுகா நாசரேத்தை சேர்ந்த குணசேகர் (வயது36) என்பதும், பெங்களூருவில் இருந்து வேலூருக்கு குட்கா கடத்த முயன்றதும் தெரியவந்தது. இதையடுத்து டிரைவரை போலீசார் கைது செய்தனர். ேமலும் குட்கா மற்றும் சரக்கு வேனையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்