பஸ்சில் குட்கா கடத்த முயன்ற வாலிபர் கைது
பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு ஓசூர் வழியாக பஸ்சில் குட்கா கடத்த முயன்ற வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஓசூர்
ஓசூர் டவுன் போலீசார் புதிய பஸ் நிலையம் பகுதியில் ரோந்து சென்றனர். அங்கு சந்தேகத்திற்கு இடமாக கையில் பையுடன் நின்ற வாலிபரிடம் போலீசார் சோதனை செய்தனர். அப்போது அவர் பையில் 14 கிலோ குட்கா வைத்து இருந்தது தெரிய வந்தது. இதுகுறித்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவர் திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் தாலுகாவை சேர்ந்த சேதுராமன் (வயது 28) என்பதும், பெங்களூருவில் இருந்து திருச்சிக்கு குட்காவை பஸ்சில் கடத்த முயன்றதும் தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர்.