சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல்

பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்துக்கு சரக்கு வாகனத்தில் கடத்த முயன்ற குட்கா பறிமுதல் செய்யப்பட்டது.

Update: 2022-08-30 17:41 GMT

மத்திகிரி:

மத்திகிரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பூபதி ராமராஜூலு மற்றும் போலீசார் ஓசூர் டி.வி.எஸ். சோதனைச்சாவடி அருகில் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் 250 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா இருந்தது. விசாரணையில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் இருந்து காஞ்சீபுரத்திற்கு குட்காவை கடத்த முயன்றது தெரிய வந்தது. இதையடுத்து ரூ.2 லட்சத்து 3 ஆயிரம் மதிப்புள்ள குட்கா மற்றும் சரக்கு வாகனத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக செங்கல்பட்டு மாவட்டம் மறைமலை நகரை சேர்ந்த டிரைவர் ஞானவேல் (வயது 26) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்