கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு குட்கா காரில் கடத்தியவர் கைது

கிருஷ்ணகிரி வழியாக சென்னைக்கு 265 கிலோ குட்கா காரில் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2022-06-04 17:03 GMT

கிருஷ்ணகிரி:

வாகன சோதனை

கிருஷ்ணகிரி சுங்கச்சாவடி அருகே நேற்று காலை கிருஷ்ணகிரி தாலுகா சப்-இன்ஸ்பெக்டர் திருப்பதி மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். நேற்று காலை, 6.30 மணியளவில் அவ்வழியாக வந்த சொகுசு காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், தடை செய்யப்பட்ட, 265 கிலோ குட்கா, ஹான்ஸ், பான்மசாலா உள்ளிட்டவை கடத்தியது தெரிய வந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு ரூ.2 லட்சத்து25 ஆயிரம் ஆகும்.

கைது

போலீசாரின் விசாரணையில் காரை ஓட்டி வந்தவர் சென்னை சவுகார்பேட்டையை சேர்ந்த கைலாஷ் (வயது 28) என்பதும், பெங்களூருவில் குட்கா பொருட்களை வாங்கி சென்னையில் விற்பனைக்காக கொண்டு சென்றதும் தெரிந்தது.

இதையடுத்து கைலாசை போலீசார் கைது செய்து காரை பறிமுதல் செய்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்