பழனிவேல் சித்தர் கோவிலில் குருபூஜை

தொங்கனூர் பழனிவேல் சித்தர் கோவிலில் நடந்த குருபூஜை யில் கே.எஸ்.அழகிரி பங்கேற்றார்.

Update: 2022-10-31 18:45 GMT

கடத்தூர் அருகே உள்ள தொங்கனூர் கிராமத்தில் மகா சங்கரலிங்கம் பித்தன் பழனிவேல் சித்தர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் 15-ம் ஆண்டு குருபூஜை விழா நடைபெற்றது. இந்த குரு பூஜையில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கலந்துகொண்டு யாக பூஜை மற்றும் பால்குட ஊர்வலத்தை தொடங்கி வைத்தார். தொடர்ந்து சிவனுக்கு பால் அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் சாமிக்கு மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் எம்.பி. தீர்த்தராமன், காங்கிரஸ் மாநில செயலாளர் ராணிப்பேட்டை பாஸ்கர் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்