கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்தால் குணடர் சட்டத்தில் கைது

கருவில் இருக்கும் பாலினத்தை கண்டறிந்தால் குணடர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று மருத்துவ இணை இயக்குனர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Update: 2022-06-08 17:57 GMT

திருப்பத்தூர்

கருவில் இருக்கும் குழந்தையின் பாலினம் கண்டறிதல் தடை சட்டம் குறித்த குறித்த விழிப்புணர்வு கூட்டம் திருப்பத்தூரில் உள்ள மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் கொ.மாரிமுத்து தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறுகையில் ''கருவில் இருக்கும் குழந்தை ஆணா? பெண்ணா? என பாலினம் கண்டறிதல், சட்டப்படி குற்றமாகும்.அவ்வாறு கண்டறிந்து சொல்பவர்கள் குணடர் சட்டத்தில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள்.

மேலும் கருகலைப்பு செய்வது உடல் ஆரோக்கியத்தை பாதிப்பதுடன் மீண்டும் குழந்தை பேறு கேள்விக்குறியாகும். சட்ட விரோதமாக கருகலைப்பு செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். போலி மருத்துவர்கள் குறித்து தகவல் தெரிவித்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் தலைவர் டாக்டர் ரத்தனா, உறுப்பினர்கள் டாக்டர் சிவசுப்பிரமணி, எஸ்.ஆர்.டி.பி.எஸ். தொண்டு நிறுவன இயக்குனர் தமிழரசி, சுந்தரமூர்த்தி உள்பட டாக்டர்கள், ஸ்கேன் மைய உரிமையாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்