குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

குண்டத்து காளியம்மன் கோவிலில் குண்டம் திருவிழா

Update: 2023-03-12 18:45 GMT

ஆனைமலை

ஆனைமலை அருகே பழைய சர்க்கார்பதியில் குண்டத்து காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி மாதம் குண்டம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு குண்டம் திருவிழா கடந்த மாதம் 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்கார மற்றும் அபிஷேக பூஜை நடைபெற்றது. பின்னர் நேற்று முன்தினம் பொன்னாலம்மன் மலைக்கோவிலில் இருந்து தீர்த்தம் மற்றும் கங்கையில் இருந்து பூவோடு கொண்டு வரும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிலையில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு திருக்கல்யாணம், காலை 7.30 மணிக்கு கங்கையில் இருந்து சக்திக்கும்பம் கொண்டு வருதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது. தொடர்ந்து 8.30 மணிக்கு விரதம் இருந்த பக்தர்கள் குண்டம் இறங்கி தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். மேலும் பெண்கள் குண்டத்தில் பூக்களை அள்ளி போட்டும், உப்பை கொட்டியும் வேண்டுதலை நிறைவேற்றினர். இன்று(திங்கட்கிழமை) தேரோட்டம் நடக்கிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணிக்கு கம்பம் இறக்குதல், இரவு 7 மணிக்கு அபிஷேக பூஜையுடன் விழா நிறைவடைகிறது. இதேபோன்று தம்பம்பதி மாகாளியம்மன் கோவிலிலும் திருவிழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் குண்டம் இறங்கி நேர்த்திக்கடனை நிறைவேற்றினர்.

Tags:    

மேலும் செய்திகள்