பாறை இடுக்கில் மறைத்து வைத்திருந்த 2 துப்பாக்கிகள் பறிமுதல்

Update: 2022-12-01 18:45 GMT

மாரண்டஅள்ளி:

மாரண்டஅள்ளி அருகே உள்ள பெருங்காடு பகுதியை அடுத்த முத்துக்கோட்டையில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜாபர் உசேன், சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியை ஒட்டி பாறை இடுக்கில் 2 துப்பாக்கிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தன. அவற்றை பறிமுதல் செய்த போலீசார், அக்கம் பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர். அப்போது இரவில் மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கிகளை பயன்படுத்தி வனப்பகுதியில் விலங்குகளை வேட்டையாடி வருவது தெரியவந்தது. அந்த மர்மநபர்கள் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்