ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை: பழனி மாணவனுக்கு பாராட்டு

ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனை படைத்த பழனி மாணவனுக்கு பாராட்டு தெரிவித்தனர்.

Update: 2022-09-17 19:21 GMT

கர்நாடக மாநிலம் சிவகங்காவில் ரோலர் ஸ்கேட்டிங்கில் கின்னஸ் சாதனைக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர், ஒடிசா என நாடு முழுவதிலும் இருந்து 1,039 பேர் கலந்துகொண்டனர். இதில் பங்கேற்ற மாணவ-மாணவிகள் தொடர்ந்து 4 நாட்கள் ரோலர் ஸ்கேட்டிங் விளையாடி சாதனை படைத்தனர். இதில், பழனியை அடுத்த புதுஆயக்குடியை சேர்ந்த கார்த்திகேயா (வயது 12) என்ற மாணவரும் கலந்துகொண்டு சாதனை படைத்தார்.

மேலும் அவருக்கு கின்னஸ் சாதனை நிகழ்ச்சியில் பங்கெடுத்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது. இதையடுத்து சாதனை படைத்த மாணவருக்கு, அவரது பெற்றோர் சிவராமன்-தாமரை செல்வி, பயிற்சியாளர்கள் கரிகாலன், அரவிந்தன் மற்றும் பள்ளி ஆசிரிய-ஆசிரியைகள், மாணவ-மாணவிகள் என பலரும் பாராட்டினர். மேலும் சாதனை படைத்த மாணவனை, பழனி போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசக்தி பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்