கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றம்

கிண்டி மருத்துவமனை திறப்பு விழா தேதி மாற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Update: 2023-05-24 09:08 GMT

சென்னை,

சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை ஜனாதிபாதி திரவுபதி முர்மு வரும் ஜூன் 5-ந்தேதி திறந்து வைப்பார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் மருத்துவமனையின் திறப்பு விழா தேதி மாற்றப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி மாற்றம் செய்யப்படும் தேதியில் ஜனாதிபதி திரவுபதி முர்மு, கலைஞர் நினைவு பன்னோக்கு மருத்துவமனையை திறந்து வைப்பார் என்றும், மாற்றப்பட்ட தேதி குறித்த விவரம் விரைவில் வெளியிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.


Full View

 

Tags:    

மேலும் செய்திகள்