காவலர் மன்றம் தொடக்க விழா
கே.வி.குப்பம் அரசு பள்ளியில் காவலர் மன்றம் தொடக்க விழா நடந்தது.
கே.வி.குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட இரண்டு தனியார் பள்ளிகள், 9 அரசு பள்ளிகள் என 11 பள்ளிகளுக்கான காவலர் மன்றம் தொடக்க விழா அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரி தலைமை தாங்கினார். சம்பந்தப்பட்ட பள்ளிகளின் தலைமை ஆசிரியர், 9, 10, 11, 12-ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களில் தலா 2 மாணவர்கள், ஒரு ஆசிரியர், ஒரு ஆசிரியை, ஒரு போலீஸ் என தேர்வு செய்யப்பட்டவர்கள் இக்குழுவில் செயல்படுவார்கள். இவர்கள் பள்ளி மற்றும் அதன் அருகில் நடக்கும் தவறுகள் குற்றங்கள் தெரிய வந்தால் அதை புகார் எண் 9092700100-க்கு தெரியப்படுத்தலாம். தகவல்கள் ரகசியமாக காக்கப்படும். சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது.