ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி
ஆயுதப்படை போலீசாருக்கு கவாத்து பயிற்சி நடந்தது.
பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி உத்தரவின்படி மாவட்ட ஆயுதப்படையில் பணிபுரியும் போலீசாருக்கு வாராந்திர கவாத்து பயிற்சி நேற்று நடந்தது. ஆயுதப்படை போலீஸ் துணை சூப்பிரண்டு சோமசுந்தரம் தலைமையில் நடைபெற்ற இந்த கவாத்து பயிற்சியில் போலீசாருக்கு உடற்பயிற்சி, லத்தி பயிற்சி, ஆயுதப்பயிற்சி ஆகிய பயிற்சிகள் அளிக்கப்பட்டன. பயிற்சியில் ஆயுதப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் தங்கம், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் ஆயுதப்படை போலீசார் கலந்து கொண்டு பயிற்சி பெற்றனர்.