மகனை கத்தியால் குத்திய காவலாளி கைது
பொள்ளாச்சி அருகே மகனை கத்தியால் குத்திய காவலாளி கைது செய்யப்பட்டார்.
வடக்கிபாளையம்
பொள்ளாச்சி அருகே மகனை கத்தியால் குத்திய காவலாளி கைது செய்யப்பட்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-
தனியார் பள்ளி காவலாளி
மதுரையை சேர்ந்தவர் பால்பாண்டி (வயது 40). இவர் குடும்பத்துடன் பொள்ளாச்சி அருகே நஞ்சேகவுண்டன்புதூரில் வசித்து வருகிறார். மேலும் அந்த பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் காவலாளியாக வேலை பார்த்து வருகிறார்.
இவருடைய மகன் விஜி (18). இவர் தனியார் பள்ளி வாகனத்தில் உதவியாளராக பணிபுரிந்து வருகிறார். பால்பாண்டியும், விஜியும் வீட்டில் ஒரே அறையில் அருகில் படுத்து தூங்குவது வழக்கம். இதேபோல் நேற்று முன்தினம் இரவு தந்தையும், மகனும் அருகில் படுத்து தூங்கினர்.
மகனுக்கு கத்திக்குத்து
அப்போது பால்பாண்டி தனது மகனை தள்ளி படுத்து தூங்குமாறு கூறியுள்ளார். ஆனால் தூக்க கலக்கத்தில் இருந்த விஜி தள்ளி போகாமல் தூங்கியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த பால்பாண்டி அருகில் கிடந்த கத்தியை எடுத்து, விஜியின் மார்பில் குத்தினார். இதில் படுகாயமடைந்த அவர் சத்தம் போட்டார்.
சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்ட பின் மேல்சிகிச்சைக்காக கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் குறித்து வடக்கிபாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டது. இதன்பேரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பால்பாண்டியை கைது செய்தனர்.
தூங்கிக்கொண்டிருந்த மகனை தந்தை கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திஉள்ளது.