ஜி.எஸ்.டி. ரோடு பகுதியில் ஜி.எஸ்.டி. ரோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
ஜி.எஸ்.டி. ரோடு பகுதியில் நாளை மின்சாரம் நிறுத்தம்
மதுரை வில்லாபுரம் மற்றும் பசுமலை துணை மின் நிலையத்தில் நாளை(திங்கட்கிழமை) பராமரிப்பு பணி நடைபெற இருக்கிறது. எனவே எம்.கே.புரம் பகுதிகளுக்கு உள்பட்ட முத்துத்தேவர் வீதி, சோழையழகுபுரம் 1 முதல் 4 வரை உள்ள தெரு, என்.எஸ்.கோனார் வீதி, பாரதியார் ரோடு, நேரு தெரு, நேதாஜி தெரு, காந்தி தெரு, பாலிடெக்னிக்ரோடு, வீரகாளியம்மன் கோவில் தெரு, ஜெய்ஹிந்த்புரம் 1,2 வது தெரு, விசாலபாகம் 1,2 தெரு, ஜீவா நகர் 1,2 வது தெரு முன்பகுதி, ராமையா 1 முதல் 8 குறுக்குதெரு, காமராஜர் காலனி, திலகர் தெரு, தென்னகரம், புலிப்பாண்டியன்தெரு ஆகிய பகுதிகள். திருப்பரங்குன்றம் பகுதிக்குட்பட்ட கூடல்மலை தெரு, டி.சி.ஈ. கல்லூரி, ஜி.எஸ்.டி.ரோடு, சன்னதி தெரு, பாம்பன் நகர், எவர்கீரின் நகர், திருமலையூர், செங்குன்றம்நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுகிறது. இந்த தகவலை மின்வாரிய செயற்பொறியாளர் பழனி தெரிவித்தார்.