அரசு பள்ளியில் குழு கூட்டம்

இட்டமொழி அரசு பள்ளியில் குழு கூட்டம் நடந்தது.

Update: 2023-06-07 20:18 GMT

இட்டமொழி:

இட்டமொழி ஏ.வி.ஜோசப் அரசு மேல்நிலைப்பள்ளியில் மாணவர்கள் இடைநிற்றலை கட்டுப்படுத்தும் பள்ளி அளவிலான குழுவின் கூட்டம் நடைபெற்றது. தலைமை ஆசிரியர் ரூபன் செல்வகுமார் தலைமை தாங்கினார். இட்டமொழி பஞ்சாயத்து தலைவர் சுமதி சுரேஷ், கிராம நிர்வாக அலுவலர் இசக்கியப்பன், ஊராட்சி செயலர் ரெகுபால், அங்கன்வாடி பணியாளர் அன்பரசி, இல்லம் தேடி கல்வி அன்புமதி, ஆசிரியர் பயிற்றுனர் ரமா, முன்னாள் மாணவர் சங்க செயலாளர் நம்பித்துரை, மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர் கலா, பள்ளி ஆசிரியர்கள் லட்சுமி, முத்துமணி, மகேஸ்வரன் ஆகியோர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் 10, 12-ம் வகுப்பில் தேர்ச்சி பெறாத அனைத்து மாணவர்களும் அரசு வழங்கும் சிறப்பு பயிற்சியில் கலந்துகொண்டு பயன்பெற தீர்மானிக்கப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்