வாலாஜாவில் குரூப் 7 பி தேர்வு
வாலாஜாவில் நடந்த குரூப் 7 பி தேர்வை கலெக்டர் பார்வையிட்டார்.
வாலாஜா அறிஞர் அண்ணா அரசினர் மகளிர் கலை கல்லூரியில் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் இந்து சமய அறநிலையத்துறையின் செயல் அலுவலர் பதவிக்கான குரூப் 7 பி எழுத்து தேர்வு நடைபெற்றது. இதனை மாவட்ட கலெக்டர் தெ.பாஸ்கர பாண்டியன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். தாசில்தார் ஆனந்தன் உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.