குரூப்-1 முதல்நிலைத் தேர்வு: 40% க்கும் அதிகமான தேர்வர்கள் ஆப்சென்ட்
1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை,
துணை கலெக்டர், வணிக வரி உதவி கமிஷனர், மாவட்ட வேலைவாய்ப்பு அதிகாரி, ஊரக மேம்பாட்டுத்துறை உதவி இயக்குனர் ஆகிய குரூப்-1 பதவிகளில் உள்ள 92 காலி இடங்களுக்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) வெளியிட்டு இருந்தது. முதல்நிலை, முதன்மை மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். அந்த வகையில் முதல்நிலைத் தேர்வு இன்று (சனிக்கிழமை) தமிழகம் முழுவதும் நடந்தது . . சென்னை, மதுரை,கோவை, திருச்சி உள்பட 38 மையங்களில் தேர்வு நடைபெறுகிறதுகாலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரையில் இந்த தேர்வு நடந்தது.
இந்த தேர்வை எழுதுவதற்காக 3,22,414 பேர் விண்ணபித்திருந்த நிலையில். 1,31,457 பேர் தேர்வெழுத வரவில்லை என தேர்வாணையம் தெரிவித்துள்ளது. 59,23% பேர் மட்டுமே, அதாவது 1,90,957 பேர் மட்டுமே குரூப் 1 தேர்வெழுத வந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்துவிட்டு பாதிக்கு பாதி பேர் தேர்வெழுத வரவில்லை என்பது கவனம் ஈர்த்திருக்கிறது.