நொய்யல் சுற்றுவட்டார பகுதிகயை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலங்களில் நிலக்கடலை பயிர் செய்துள்ளனர். நிலக்கடலை விளைந்ததும் பறித்து உள்ளூர் பகுதிகளுக்கு வரும் வியாபாரிகளுக்கு விற்பனை செய்து வருகின்றனர். பின்னர் எந்திரம் மூலம் நிலக்கடலையை பிரித்து எடுத்து நன்கு காய வைத்து கடலை எண்ணெய் தயாரிக்கும் மில்களுக்கும், நிலக்கடலை பருப்பு விற்பனை செய்யும் கடைகளுக்கும் மூட்டைகளாக அனுப்பி வைக்கின்றனர். இந்நிலையில் கடந்த வாரம் ஒரு கிலோ நிலக்கடலை ரூ.73-க்கு விற்றது தற்போது வரத்து குறைவால் ரூ.80-க்கு விற்பனையாகிறது.