பொறையாறு:
தரங்கம்பாடி தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் விவசாயமும், அதற்கு அடுத்தப் படியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக நடைபெற்று வருகிறது. இந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் நெல், பருந்தி, உளுந்து, கரும்பு, வாழை, நிலக்கடலை, எள், மக்காசோளம், கம்பு, மரவள்ளி கிழங்கு. சக்கரவள்ளி கிழங்கு, கேழ்வரகு, பனங்கிழங்கு மற்றும் காய்கறி வகைகள் மிளகாய், உள்ளிட்டவைகளை அந்தப் பகுதி விளைச்சலுக்கு ஏற்றது போல் சாகுபடி செய்து வருகின்றனர். மேலும் காழியப்பநல்லூர், தில்லையாடி. திருவிடைக்கழி, சிங்கானோடை, ஆணைக்கோவில் உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் மணல் பாங்கான இடத்தில் ஆண்டுக்கு 3,முறை சுமார் 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட ஏக்கரில் நிலக்கடலை சாகுபடி செய்து வருகின்றனர்.அதே போல் இந்த முறையும் காழியப்பநல்லூர், சிங்கானோடை, பத்துக்கட்டு உள்ளிட்ட சுற்று வட்டார பகுதிகளில் விவசாயிகள் தங்களது நிலத்தை உழுது, இயற்கை உரம் இட்டு அந்தப் பகுதிகளில் ஆட்கள் மூலமும், கை எந்திரம் மூலமும் நிலக்கடலை நடவு செய்து சாகுபடி பணியை தொடங்கி உள்ளனர்.