சேவூரில், ரூ.1,30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்.

சேவூரில், ரூ.1,30 லட்சத்திற்கு நிலக்கடலை ஏலம்.

Update: 2023-07-31 11:34 GMT

சேவூர்

சேவூர் ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் நேற்று நடைபெற்ற ஏலத்தில் சுமார் 5 விவசாயிகள் கலந்து கொண்டு 43 மூட்டை நிலக்கடலையை ஏலத்திற்கு கொண்டு வந்து இருந்தனர். சேவூர் சுற்று வட்டார வியாபாரிகள் 3 பேர் கலந்து கொண்டு மறைமுக ஏலத்தின் வாயிலாக குவிண்டால் ஒன்றுக்கு முதல் ரக நிலக்கடலை ரூ.7,900 முதல் ரூ.8,010 வரையிலும், இரண்டாம் ரக நிலக்கடலை ரூ.7,600 முதல் ரூ.7,900 வரையிலும், மூன்றாம் ரக நிலக்கடலை ரூ.7,500 முதல் ரூ.7,600 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ரூ.1.30 இலட்சத்திற்கு ஏலம் நடைபெற்றது.


Tags:    

மேலும் செய்திகள்