புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
கிளியனூர் ஊராட்சியில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா
குத்தாலம்:
குத்தாலம் அருகே கிளியனூர் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் உள்ளது. இந்த சுகாதார நிலைய கட்டிடம் மிகவும் சேதமடைந்ததால் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இடிக்கப்பட்டது. இதை தொடர்ந்து ரூ.60 லட்சம் மதிப்பீட்டில் புதிய அரசு ஆரம்ப சுகாதார நிலையம் கட்ட அடிக்கல் நாட்டு விழா நடந்தது. விழாவுக்கு கிளியனூர் ஊராட்சி மன்ற தலைவர் முகமது ஹாலிது தலைமை தாங்கினார்.வட்டார சுகாதார மேற்பார்வையாளர் அமிர்தகுமார், ஒன்றிய குழு உறுப்பினர் சுகந்தவல்லி ராஜேந்திரன், முன்னாள் ஒன்றியக்குழு துணை தலைவர் அபுல்ஹசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிவேதா முருகன் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு கட்டிடம் கட்ட அடிக்கல் நாட்டினார். மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உமா மகேஸ்வரி சங்கர், ஒன்றியக்குழு தலைவர் மகேந்திரன், குத்தாலம் கிழக்கு தி.மு.க. ஒன்றிய செயலாளர் மங்கை சங்கர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.