எர்ரப்பட்டியில் முதியோர் காப்பகத்திற்கு மளிகை பொருட்கள் வழங்கும் விழா

Update: 2023-08-10 19:45 GMT

நல்லம்பள்ளி

கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி நல்லம்பள்ளி அருகே எர்ரப்பட்டி கிராமத்தில் உள்ள முதியோர் காப்பகத்திற்கு, தி.மு.க. சார்பில், 8 இரும்பு கட்டில்கள் மற்றும் மளிகை பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கிழக்கு ஒன்றிய செயலாளர் சண்முகம் தலைமை தாங்கி காப்பகத்திற்கு இரும்பு கட்டில்கள் மற்றும் ஒரு மாதத்திற்கு தேவையான மளிகை பொருட்களை வழங்கினார்.

இந்த நிகழ்ச்சியில் மாவட்ட துணை செயலாளர் ஆறுமுகம், முன்னாள் ஒன்றிய செயலாளர் துரைசாமி, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் நாகராஜ், கிராம வளர்ச்சிக்குழு தலைவர் பொன்னரசு, ஏ.ஜெட்டிஅள்ளி ஊராட்சி மன்ற துணைத்தலைவர் காசிலிங்கம், அவைத்தலைவர் வீரமணி, இலக்கிய அணி நிர்வாகி வெங்கட்ராமன், காப்பக பொறுப்பாளர் திலகவதி மற்றும் கட்சி நிர்வாகிகள், காப்பக பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்