மின்பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம்
வருகிற 22-ந்தேதி மின்பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது.
காரைக்குடி,
காரைக்குடி மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகத்தில் வருகிற 22-ந்தேதி காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்பயனீட்டாளர்களுக்கான குறைதீர் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் காரைக்குடி மின்வாரிய கோட்டத்திற்கு உட்பட்ட பயனீட்டாளர்கள் நேரில் கலந்து கொண்டு தங்கள் பகுதியில் உள்ள மின்வாரியம் சார்ந்த குறைகளை நேரில் தெரிவித்து அதை நிவர்த்தி செய்துகொள்ளலாம். இந்த தகவலை மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.