படப்பகுறிச்சியில் குறைதீர்க்கும் முகாம்: மேயா், துணை மேயர் பங்கேற்பு
படப்பகுறிச்சியில் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. இதில் மேயா், துணை மேயர் பங்கேற்று மக்களிடம் கோரிக்கை மனுக்களை வாங்கினர்.
நெல்லை மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி அறிவுறுத்தலின்பேரில், தச்சநல்லூர் மண்டலம் 4-வது வார்டுக்கு உட்பட்ட படப்பகுறிச்சி சமுதாய நலக்கூடத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நடந்தது. மாநகராட்சி துணை ஆணையாளர் தாணுமூர்த்தி, மண்டல உதவி ஆணையாளர் கிறிஸ்டி ஆகியோர் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றனர்.
மாநகராட்சி மேயர் சரவணன், துணை மேயர் ராஜூ ஆகியோர் முகாமை பார்வையிட்டுஆய்வு செய்தனர். முகாமில் பொதுமக்களிடம் இருந்து 23 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டன. இதில் 6 மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டது. மேலும் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர் கட்டணமாக ரூ.68 ஆயிரம் வசூல் செய்யப்பட்டது. மண்டல தலைவர் ரேவதி, மாமன்ற உறுப்பினர் வசந்தா, உதவி வருவாய் அலுவலர் அந்தோணி மரியதாஸ், சிறப்பு வருவாய் ஆய்வாளர் அருந்தவசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.