மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம்

முத்துப்பேட்டை போலீஸ் நிலையத்தில் மனுக்களுக்கு தீர்வு காணும் முகாம்

Update: 2023-07-25 18:45 GMT

முத்துப்பேட்டை:

முத்துப்பேட்டை போலீஸ் நிலையம் வளாகத்தில் முத்துப்பேட்டை உட்கோட்டத்துக்கு உட்பட்ட பொதுமக்கள் பிரச்சினைக்கு உடனடி தீர்வு காணும் வகையில் மனுக்கள் தீர்வு காணும் முகாம்

நடைபெற்றது. துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் தலைமை தாங்கினாா். முத்துப்பேட்டை, எடையூர், பெருகவாழ்ந்தான், களப்பால், திருக்களார் ஆகிய போலீஸ் சரகத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் தங்களது பல்வேறு பிரச்சினைகள் குறித்து புகார் மனு கொடுக்க வந்திருந்தனர். முகாமில் மொத்தம் 10 மனுக்கள் பெறப்பட்டு துணை போலீஸ் சூப்பிரண்டு விவேகானந்தன் உடனடியாக சம்பந்தப்பட்டவர்களிடம் நேரடியாக பேசி தீர்வு ஏற்படுத்தி கொடுத்தார். முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ், சப்-இன்ஸ்பெக்டர்கள் பாலசுப்பிரமணியன், முத்துக்குமார், மகளிர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் மகாலட்சுமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.


Tags:    

மேலும் செய்திகள்