கள்ளக்குறிச்சியில்ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம்கலெக்டர் ஷ்ரவன்குமார் தலைமையில் நடந்தது

கள்ளக்குறிச்சியில் ஓய்வூதியர்களுக்கான குறைகேட்பு கூட்டம் கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமையில் நடந்தது.

Update: 2023-08-11 18:45 GMT

குறைகேட்பு கூட்டம்

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அரசுத்துறைகளில் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்களுக்கான குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. இதற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். சென்னை ஓய்வூதிய இயக்குனர் ஸ்ரீதர் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்ட ஓய்வூதியர்கள் தாங்கள் ஆஸ்பத்திரிகளில் செலவு செய்யும் தொகைகளை உடனுக்குடன் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் வழங்கிட வேண்டும். ஓய்வூதியர்கள் இறக்கும்போது வழங்கப்படும் தொகையையும் உடனுக்குடன் வழங்கிட வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். அதற்கு பதிலளித்து பேசிய சென்னை ஓய்வூதிய இயக்குனர் ஸ்ரீதர் மருத்துவமனைகளில் செலவு செய்யும் தொகையை குறுகிய காலத்திற்குள் மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் திரும்ப வழங்க நடவடிக்கை எடுப்பதுடன், இறப்பிற்கான தொகையினை ஓய்வூதியர்களுக்கு உடனுக்குடன் வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என சம்பந்தப்பட்ட அலுவலர்களை அறிவுறுத்தினார்.

மனுக்கள் மீது உடனடி நடவடிக்கை

குறைதீர்ப்பு கூட்டத்தில் மொத்தம் 36 மனுக்கள் வரப்பெற்றன. அந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் ஷ்ரவன் குமார் உத்தரவிட்டார்.

இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (கணக்குகள்) மலர்விழி, மாவட்ட கருவூல அலுவலர் பாபு, தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) ராஜலட்சுமி, கள்ளக்குறிச்சி கோட்டாட்சியர் பவித்ரா, உதவி ஆணையர் (கலால்) ராஜவேல் உள்பட அனைத்துத்துறை அலுவலர்கள், ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்