மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம்
வாணியம்பாடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது.
வாணியம்பாடி உதவி கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைதீர்வு கூட்டம் நடைபெற்றது. உதவி கலெக்டர் பிரேமலதா தலைமை தாங்கினார். மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் (பொறுப்பு) முருகேசன் முன்னிலை வகித்தார்.
கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் அளித்த கோரிக்கை மனுக்களை பெற்றுக் கொண்ட உதவி கலெக்டர் சம்பந்தப்பட்ட துறையினருக்கு அனுப்பி விரைந்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.
வங்கி கடன் மானியம் பெறுவதற்கு கோரிக்கை மனு வழங்கிய மாற்றுத்திறனாளியிடம் உதவி கலெக்டர் விசாரித்து உடனடியாக சம்பந்தப்பட்ட வங்கி கிளைக்கு பரிந்துரை கடிதம் வழங்கி நடவடிக்கை எடுத்தார்.
கூட்டத்தில் தனி தாசில்தார் (சமூக பாதுகாப்பு) பழனி, சுரேஷ் (ஆம்பூர்) உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.