போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம்
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் குறைதீர்வு கூட்டம் நடந்தது.
ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்தது. வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, ராணிப்பேட்டை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கிரண் ஸ்ருதி ஆகியோர் தலைமை தாங்கினர்.
கூட்டத்தில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்கள் மற்றும் திருப்தியின்மை காரணமாக மறு விசாரணைக்கு அழைக்கப்பட்ட 8 மனுக்கள் என மொத்தமாக 16 மனுக்கள் பெறப்பட்டன. மனுக்களை விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என டி.ஐ.ஜி. தெரிவித்தார். கூட்டத்தில் போலீஸ் அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.