போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது.

Update: 2023-06-14 19:00 GMT

நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடந்தது. மாநகர போலீஸ் கமிஷனர் ராஜேந்திரன், துணை கமிஷனர்கள் சரவணகுமார், அனிதா ஆகியோர் கலந்துகொண்டு பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை வாங்கினர். தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.

அதேபோல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திலும் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிலம்பரசன் கலந்துகொண்டு கோரிக்கை மனுக்கள் பெற்றார். தொடர்ந்து அந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதில் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்