மக்கள் குறைதீர்க்கும் கூட்டம்

போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது

Update: 2023-05-10 18:45 GMT

சிவகங்கை

சிவகங்கை மாவட்ட காவல் துறையின் சார்பில் மாவட்ட அளவிலான பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் சிவகங்கையில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நடந்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கூடுதல் போலீஸ் மற்றும் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இதில் பொதுமக்களிடமிருந்து நூற்றுக்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. புதிதாக கொடுக்கப்பட்ட 24 மனுக்கள் மற்றும் ஏற்கனவே கொடுக்கப்பட்ட 10 மனுக்கள் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டர் நடத்தும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கொடுக்கப்பட்ட மனுக்கள் என மொத்தம் 56 மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டது. மற்ற மனுக்கள்மீது விசாரணை நடத்தி சட்ட விதிகளுக்கு உட்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரிகளுக்கு போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார்.

Tags:    

மேலும் செய்திகள்