மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 584 மனுக்கள் பெறப்பட்டன
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 584 மனுக்கள் பெறப்பட்டன.
தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் 584 மனுக்கள் பெறப்பட்டன.
குறைதீர்க்கும் கூட்டம்
தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் சாந்தி தலைமை தாங்கி பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். இதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் தீபனாவிஸ்வேஸ்வரி, மாவட்ட வருவாய் அலுவலர் அனிதா, கலால் உதவி ஆணையர் தணிகாசலம், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சாந்தி, பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் ராஜசேகரன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் கவிதா மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பஸ் வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படை வசதிகள் வேண்டியும், பட்டா, சிட்டா பெயர் மாற்றம், பட்டா, புதிய குடும்ப அட்டை, வாரிசு சான்றிதழ், வேலைவாய்ப்பு, இலவச வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியத்தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு கொடுத்தனர்.
அலுவலர்களுக்கு உத்தரவு
மேலும் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகைகள், உதவி உபகரணங்கள் வேண்டி மனு கொடுத்தனர். கூட்டத்தில் மொத்தம் 584 மனுக்கள் பொதுமக்கள் கொடுத்தனர். இந்த மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி விசாரணை நடத்தி உடனடி நடவடிக்கை எடுக்க கலெக்டர் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். கூட்டத்தில் பொதுமக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை கலெக்டர் வழங்கினார்.